ஆஸிக்கு எதிரான T20 தொடருக்கு உபுல் தரங்கா தலைமை தாங்குகிறார்…

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான T20 தொடரில் இருந்து உபாதை காரணமாக இலங்கை அணியின் தலைவரான மேத்யூஸ் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான T20 தொடருக்கு உபுல் தரங்கா தலைவராக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணி போன்ற பெரிய அணிக்கு எதிரான தொடரின் போது ஒரு அனுபவ வீரர் இல்லாதது இலங்கை அணிக்கு ஒரு அடியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் T20 போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.