முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்த மனு இன்று(07)) நீதிமன்றில் பரிசீலனை செய்யப்பட உள்ளது.
பிரபல றகர் வீரர் வஸீம் தாஜூடீன் படுகொலை சம்பவம் தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
பிணை வழங்குமாறு கோரி சட்டத்தரணிகள் ஊடாக அனுர சேனாநாயக்க நேற்று(06) மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த இந்த மனு தொடர்பில் இன்று பரிசீலனை செய்யப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க அறிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைகளில் சட்ட மா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதி சொலிசுட்டர் ஜெனரல் நேற்றைய வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதன் காரணமாகவே மனுவை இன்று பரிசீலனை செய்ய நீதிபதி தீர்மானித்திருந்தார்.