காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருந்த லசித் மாலிங்க தற்போது விளையாடுவதற்கான முழு உடற் தகுதியுடன் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் மருத்துவ குழு உறுப்பினர் பேராசிரியர் அர்ஜுன் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அது குறித்து அவர் தெரிவிக்கையில்; “மருத்துவ குழு பக்கம் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை . லசித் மாலிங்கவிற்கு விளையாட முடியும் என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முதலில் அவுஸ்திரேலியா அணியுடனான இருபதுக்கு 20 போட்டிகள் இருக்கின்றன. அதில் கலந்து கொள்ள முடியும் . தேர்வுக் குழுவொன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னரே கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். லசித் விளையாடுவாரா இல்லையா என்று…” என தெரிவித்துள்ளார்.