இலங்கையில் புற்றுநோய் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, சுவீடன் மருத்துவ குழு ஒன்று இலங்கை வரவுள்ளது.
புற்றுநோய் கூடுதலாக வியாபித்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதில் இலங்கைக்கு, சுவீடனின் மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று உதவுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த ஆய்வு குழுவினர் இலங்கை வந்து பரிசோதனைகளை நடத்தவுள்ளதாகவும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையுடன் இணைந்து பரிசோதனைகள் நடத்தப்படுவதோடு, குறித்த பரிசோதனையில் இரத்தப்புற்றுநோய் பற்றிய ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுமென, சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.