லேக்ஹவுஸ் நிறுவனம் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்…

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முறையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நிமல் தசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்தின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ குறைகளை அடையாளம் காணுதல், நிதி முறைமைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.