சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையும் சினிமா படமாக… ரிலீஸ் திகதி அறிவிப்பு… [VIDEO]

சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையும் சினிமா படமாக… ரிலீஸ் திகதி அறிவிப்பு… [VIDEO]

இந்திய கிரிக்கெட் அணியின் கெப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு, ‘டோனி த அன்டோல்டு ஸ்டோரி’ என்ற பெயரில் படமாகி சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. வெளிநாடுகளிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல அபார சாதனைகளை நிகழ்த்தி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகியுள்ளது. இந்த படத்துக்கு ‘சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் திரைக்கு வர உள்ளது. இதில் சச்சின் தெண்டுல்கரே அவரது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜேம்ஸ் எர்ச்கின் டைரக்டு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை வரும் மே 26-ஆம் திகதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=TamUy_PZzBM” width=”560″ height=”315″]

 

[youtube url=”https://www.youtube.com/watch?v=pRRKsWrmoDQ” width=”560″ height=”315″]