
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை இன்று(14) வர்த்தமானியில்…
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை இன்று (14) வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அறிக்கையை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாகாண மற்றும் உள்ளுராட்சி அமை ச்சின் சட்டத்துறை பிரிவு மேற்கொண்டிருந்தது.
எல்லை நிர்ணய அறிக்கை இம்மாத இறுதிக்குள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என அமைச்சர் பைசர் முஸ்தபா அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க இன்று குறித்த அறிக்கையை வர்த்தமானியில் பிரசுரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்துவதற்கு 75% வாய்ப்பு உள்ளதாகவும், சட்டமா அதிபர் திணைக்கள ஆலோசனையுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வருடத்தில் நடத்தப்படவுள்ள அனைத்து தேர்தல்கள் தொடர்பான அடிப்படை செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது