சந்திரிக்கா – மகிந்தவுக்கு ரோஜா மலர் கொடுக்க வேண்டும்?

காதலர் தினத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ரோஜா பூ ஒன்றை வழங்குவார் என்றே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதேபோல் மகிந்த ராஜபக்ச ரோஜா மலர் ஒன்றை எடுத்துச் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இருவரும் ரோஜா மலர்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் எனவும் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதுளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு என்ற வகையில் நாம் வித்தியாசமாக சிந்திக்கின்றோம். உலகில் வேறு நாடுகளில் தாய்மார், தந்தையர், பெண்கள் என தினங்களை கொணடாடி வருகின்றனர்.

எனினும் இலங்கையர்கள் தினமும் அதனை அனுஷ்டித்து வருகின்றனர் எனவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.