மலையகப் பகுதியில் பிரபல அரசியல்வாதியின் சகோதரர் ஒருவர் நிலப்பரப்பு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சுமார் நான்கு ஏக்கர் நிலப்பரப்பினை 45 கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலப்பரப்பில் பாரியளவிலான ஹோட்டலை ஒன்றை நிர்மாணிப்பத்றகான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
குறித்த காணியை கொள்வனவு செய்வதற்கு முன்னர் துறைசார் அதிகாரிகளை அழைத்து ஹோட்டல் நிர்மாணிக்க முடியாத காரணங்கள் ஏதாவது உண்டா என ஆராயப்பட்டுள்ளது.
அங்கு குறித்த அரசியல்வாதிக்கு எதிராக பேச முடியாத அதிகாரிகள், இந்த ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை எனக் கூறியுள்ளனர்.
எனினும் நீர் அதிகம் உள்ள இந்த இடத்தில் நிர்மாணிப்பு அல்லது காடுகளை அழிக்க முடியாத நிலைமையினால் அந்த நிலப்பரப்பின் முதல் உரிமையாளர் இந்த வீடு மற்றும் காணியை கைவிட்டிருந்தார் என கூறப்படுகின்றது.
எனினும் காணியை கொள்வனவு செய்த அரசியல்வாதியின் சகோதரர் ஹோட்டல் நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.