இன்று(17) மதியம் 12 மணி – 3 மணி வரை காலி வீதி, கண்டி வீதி மற்றும் நீர் கொழும்பு வீதியில் வாகன நெரிசல் ஏற்பட கூடும் என காவற்துறைஅறிவித்துள்ளது.
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மதியம் பல்கலைக்கழக மாணவர்கள் வாகனங்களில் ஆர்ப்பாட்டங்களை கொழும்பு நோக்கி முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.