HIV எய்ட்ஸ் வைரஸ் – இலங்கைக்கு மற்றுமோர் சான்றிதழ்…

HIV எய்ட்ஸ் வைரஸ் தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவதை தடுக்கும் நாடு என்ற வகையில் இலங்கைக்கு இந்த வருட இறுதிக்குள் உலக சுகாதார அமைப்பிடமிருந்து சான்றிதழ் ஒன்று கிடைக்கவுள்ளது.

தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

அதன் பணிப்பாளர், மருத்துவர் சிசிர லியனகே இதுபற்றி கூறுகையில், 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் தாய்மார்களில் 95% ஆனோர் எயிட்ஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கியுபா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தாயிடமிருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் பரவுவதை தடுத்த நாடுகள் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.