தேசிய வீடமைப்புத்திட்ட நிகழ்வு இன்று  பிரதமரின் தலைமையில்

தேசிய வீடமைப்புத்திட்ட நிகழ்வு இன்று பிரதமரின் தலைமையில்

தேசிய வீடமைப்பு தின தேசிய நிகழ்வு இன்று (23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் – வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பங்களிப்பில் திஸ்ஸமாராம தெம்பரவெல அரங்கில் நடைபெறவுள்ளது.

ஒன்றிணைந்த வீடமைப்பு அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில் இம்முறை தேசிய வீடமைப்பு தின நிகழ்வு நடைபெறவுள்ளது. வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் அழைப்பின் பேரிலேயே பிரதம அதிதியாக பிரதமர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

தேசிய வீடமைப்பு தினத்தன்று தேசிய வீடமைப்பு வாரத்தை பிரகடனப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முதலாவது தேசிய வீடமைப்பு தின கொடி இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.