மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊவா மாகாணத்தின் அனைத்து அரசாங்க மருத்துவமனைகளின் மருத்துவர்களும் அடையாள சேவை புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் அம்மாகாணத்தின் மருத்துவனைகளில் சிகிச்சை நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் சிலர் இன்று(20) காலை பதுளை மருத்துவமனையில் இருந்து பதுளை நகரம் வரை பேரணியாக சென்று எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.