அவுஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் கடைத்தொகுதி ஒன்றின் மீது இலகு ரக விமானம் ஒன்று வீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும் கடைத்தொகுதியில் இருந்த எவருக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என விக்டோரியா காவற்துறை தெரிவித்துள்ளது.
மெல்போர்ன் நகரில் எசன்டர் என்ற பெயருடைய சிறிய விமானம், விமான நிலையத்தில் இருந்து மேலே எழுந்த சிறிது நேரத்திலேயே விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.