ஸ்கொட்லாந்தில் வாகனங்களை செலுத்திக் கொண்டே தொலைபேசியை உபயோகிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணம் இரட்டிப்பாக்கப்படவுள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விடயம் தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்தின் படி, வாகனத்தை செலுத்திக் கொண்டே தொலைபேசியை உபயோகிப்பவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த அபராதத் தொகையின் இரண்டு மடங்கினை செலுத்த வேண்டி ஏற்படும் எனவும் அது தொடர்பில் தற்போது வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புதிய சட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 01 ஆம் திகதி நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் அதன்படி, மேற்குறித்த குற்றத்தில் ஈடுபடும் ஒருவருக்கு 200 பவுண்கள் அபராதம் மற்றும் 06 புள்ளிகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைபேசியை உபயோகித்துக் கொண்டு வாகனம் செலுத்துவதால் ஏற்படும் வீதி விபத்துக்களை தவிர்க்கும் வகையிலேயே குறித்த சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.