எதிர்வரும் 23ம் திகதி இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 04.00 மணி வரை வெள்ளவத்தை மற்றும் தெஹிவளைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் புதிய பாலம் ஒன்றை அமைப்பதே இதற்குக் காரணம் என, ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.