அட்லான்டிக் பெருங்கடலின் வடமேற்கு பகுதி மற்றும் கரீபியன் கடல் பகுதியில் உள்ள பிரபலமான மர்ம பகுதி பெர்முடா முக்கோணம் ஆகும்.
அதற்கு நோராக பூமியின் மறுபுறத்தில் இருக்கும் பகுதியே பிசாசின் கடல் என அழைக்கப்படும் டிராகன் முக்கோணம் எனும் பகுதியாகும். பசுபிக் கடலின் ஒரு பகுதியே ஜப்பான் மக்களால் இவ்வாறான பயங்கரப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.
ஜப்பான் கடற்கரை பகுதியில் உள்ள இந்த பிசாசின் கடல் டோக்கியோ நகரிற்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் அமையப்பெற்றுள்ளது மியாகே தீவு. இந்த தீவுப் பகுதியிலேயே குறித்த பிசாசின் கடல் அமையப் பெற்றுள்ளது.
இதற்கு மா நோ உமி என்ற பெயர் ஒன்றும் இருக்கின்றது. இதன் மர்மம் என்ன வென்றால் இந்தப் பகுதி வாயிலாக பயணிக்கும் எவரும் திரும்பி வருவதில்லை.
பேர்மூடா பகுதியின் ஊடாக பயணிக்கும் எந்த வொரு கப்பலும், விமானமும் தப்பிச் செல்லாது. அதே போல மா நோ உமி பகுதியூடாக பயணிக்கும் கப்பல், விமானங்களுக்கும் அதே கதிதான். எதுவுமே திரும்புவதில்லை.
மேலும் அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையை ஒட்டியுள்ள பெர்முடா முக்கோணத்துக்கு நேராக பூமிப் பந்தின் மறு புறத்தில் ஜப்பானின் பிசாசு முக்கோண பகுதி அமைந்திருப்பதால் இந்த மா நோ உமி பகுதி அச்சத்திற்குரிய பிரதேசமாக பார்க்கப்படுகின்றது.
1952 – 1954 காலகட்டத்தில் இந்த டிராகன் முக்கோண கடல் பகுதி வழியாக 700 பயணிகளுடன் சென்ற ஜப்பானின் ராணுவ கப்பல்கள் நிலை என்னவானது என்பது இன்று வரை புரியாத புதிர்.
இதனைக் கண்டு பிடிக்க சென்ற 31 விஞ்ஞானிகள் அடங்கிய குழுவும் சேர்ந்தே காணாமல் பேய்விட்டனர். அதன் பின்னரே ஜப்பான் அரசு அந்தப் பகுதியை அபாயம் மிகுந்த பகுதியாக அறிவித்தனர்.
இதேவேளை இந்தத் கடற்பரப்பில் புதிதாக பல தீவுகள் உருவாகின்றது அத்தோடு பல தீவுகள் மறைந்தும் போவது வழக்கமாக நடைபெறும் ஒன்றாக இருக்கின்றது.
இந்தப் பகுதிகளில் ட்ராகன்கள் வாழ்ந்து வருவதாகவும் அவைகளே இவ்வாறான மர்மத்தை செய்து வருவதாகவும் புராணக்கதைகளை அடிப்படையாக கூறி ஜப்பான் மக்கள் நம்பி வருகின்றனர்.
‘‘மியாகே தீவுப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான டிராகன்கள் வாழ்ந்தன. அந்த இனத்தின் அமானுஷ்ய சக்தி காரணமாகவே அங்கு மர்மங்கள் தொடர்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் விஞ்ஞானிகள் தரப்பு உலகின் இரு மூளைகளை இணைக்கும் கருந்துளைகள் அங்கு இருப்பதாகவும் நம்பி வருகின்றனர்.
எவ்வாறாயினும் விஞ்ஞானிகளுக்கு தெரிந்த பல விடைகள் மறைக்கப்பட்டு கொண்டே வருகின்றது. என்றாலும் அந்தப் பகுதிகளில் மறைமுக ஆய்வுகள் தொடரப்பட்டு கொண்டு வருகின்றது.
பிரபஞ்சத்தின் பாதைகளுக்கும், கருந்துளை மர்மங்களுக்கும் மா நோ உமி மற்றும் பேர்மூடா முக்கோணப் பகுதிகள் விடை தரக் கூடிய பகுதிகளாகவே இருக்கும் என்பது ஆள்வாளர்களின் நம்பிக்கை.