ஆஸிக்கு எதிரான இன்றைய போட்டியில் விக்கெட் காப்பாளராக குசல் மென்டிஸ்…

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 3 ஆவதும் இறுதியுமான T-20 போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளராக குசல் மென்டிஸ் கடமையாற்றுவாரென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ICC இனது விதிமுறைகளை மீறி செயற்பட்ட காரணத்தால் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளராகவும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் செயல்பட்ட நிரோஷன் திக்வெல்லவுக்கு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று(22)அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இடம்பெறவுள்ள T-20 போட்டியில் நிரோஷன் திக்வெல்லவுக்கு பதிலாக குசல் மென்டிஸ் விக்கெட் காப்பாளராக செயல்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.