அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 5,000 ரூபா…

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அறநெறிப் பாடசாலைகளுக்கான நூலக கொடுப்பனவையும் அறநெறி ஊக்குவிப்பு கொடுப்பனவையும் ஒன்றிணைத்து வழங்குவதற்காக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்திருந்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இதற்கமைய, புத்தசாசன அமைச்சு மற்றும் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க அனுமதி கிடைத்திருப்பதாக புத்தசாசன அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.