இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான T-20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றியினை வசப்படுத்தியது.
அடிலைட்டில் நேற்று(22) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது.
பின்னர், 188 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது.
எனினும், மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.
நேற்றைய போட்டியின் சிறப்பாட்ட காரராக அடம்ஸ் சம்பா தெரிவு செய்யப்பட்டதுடன், தொடரின் சிறப்பாட்டகாரராக இலங்கை அணியில் அசேல குணரத்ன தெரிவானார்.