இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் இல்லை – பங்களாதேஷ் அணித் தலைவர் மகிழ்ச்சி …

இலங்கை அணியுடன் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமது அணி சார்பில் அதிகளவு திறமையினை வெளிப்படுத்த இம்முறை முடியும் என தாம் எண்ணியுள்ளதாக பங்களாதேஷ் அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்துள்ளார்.

இன்னும், இலங்கை அணி சார்பில் திறமையான வீரர்கள் இல்லாமையினேயே இதற்குக் காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக அதிக திறமைகளை வெளிக்காட்டிய குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன,திலகரத்ன டில்ஷான், திலான் சமரவீர மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் தற்போது இலங்கை அணியில் இல்லாமை தமது அணிக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறே, கடந்த சில போட்டிகளில் பங்களாதேஷ் அணி திறமைகளை வெளிப்படையாக சாதித்து வருவதாகவும் பங்களாதேஷ் அணியின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி எதிர்வரும் மார்ச் 07ம் திகதி ஆரம்பமாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.