இம்மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கான ரூ.2000 சம்பள உயர்வு

இம்மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கான ரூ.2000 சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கான மற்றொரு 2000 ரூபா சம்பள உயர்வு இந்த ஜூன் மாதத்திலிருந்து வழங்கப்படவுள்ளது என திறைசேரியின் துணைச் செயலாளர் எஸ்.ஆர். அர்ரி கலே தெரிவித்தார்.

நேற்று (22) நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு உறுதியளித்தவாறே ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முறையே 5000, மற்றும் 3000 சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அத்துடன் இம்மாதம் வழங்கப்படவுள்ள 2000 ரூபாவினையும் கருத்திற் கொள்ளும் போது , இதன்படி அரசு மக்களுக்கு உறுதியளித்த 10,000 சம்பள உயர்வானது நிறைவேறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.