வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 16 கைதிகளின் குடும்பங்களுக்கு தலா 27 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கியுள்ளது.
இதேவேளை குறித்த மோதல் சம்பவத்தின் போது காயமடைந்த கைதிகளுக்கு தலா 5 இலட்சம் நட்டஈடு வழங்கவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த கைதிகள் உயிழந்தமை குறிப்பிடத்தக்கது.