இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலதிக பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனையின் பிரகாரம் பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு – கல்கிஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து நேற்று(01) துப்பாக்கி ஒன்றும், தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதால் நீதிமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையினால் சுமார் மூன்று மணிநேரம் நீதிமன்ற செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக நீதிமன்றங்களின் பாதுகாப்பு தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களினதும் மேலதிக பாதுகாப்பிற்காக பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.