சுமார் 50 இற்கும் மேற்பட்ட புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்கு… – தேர்தல் ஆணையகம்…

சுமார் 50 இற்கும் மேற்பட்ட புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பம் வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பெப்ரவாரி 01ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை விண்ணப்ப பத்திரம் ஏற்கும் பணிகளை தேர்தல் ஆணையகம் முன்னெடுத்திருந்தது. அதன்படி விண்ணப்பம் ஏற்கும் பணி பெப்ரவாரி 28ம் திகதியுடன் நிறைவு பெற்றுள்ளது. மேற்படி, பதிவுத் தபால் மற்றும் உடன் கையளிப்பு ஆகிய விண்ணப்பங்கள் சுமார் 50 கிடைக்கப் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து பார்த்து பதிவு செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அது குறித்த சாராம்சம் இன்று(02) வெளியிடப்படவுள்ளது எனவும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய அவர்கள் தெரிவித்துள்ளார்.