ஸ்மித் சர்வதேச கிர்க்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்…

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர் ட்வைன் ஸ்மித் (Dwayne Smith) சர்வதேச கிர்க்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

33 வயதான அவர் தற்போது பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் இஸ்லாமா பாத் யுனைடட் அணிக்காக விளையாடி வருகிற, இந்நிலையியே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2015ம் ஆண்டு உலக கிண்ண தொடரின் பின்னர் அவர் மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பெற்றிருக்கவில்லை.

2003ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த அவர், 105 ஒருநாள் போட்டிகளில் 1560 ஓட்டங்களையும், 10 டெஸ்ட் போட்டிகளில் 320 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

அத்துடன் 33 – இருபதுக்கு20 போட்டிகளில் 582 ஓட்டங்களைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.