வஸீம் தாஜூடினின் கொலை – அனுர தொடர்ந்தும் விளக்கமறியலில்…

றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூடினின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று(02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் சொக்சி உத்தரவு பிறத்துள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேராவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வசீம் தாஜூடினின் கடன் அட்டை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.