கல்கிஸ்சை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் காவற்துறையிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘ரோஸா’ என்றழைக்கப்படும் எஸ்.டி. ரொஷான் இந்திக டி சில்வா அல்விஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 20 பேர் நேற்று(02) கைது செய்யப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.