ஒருபோதும் வௌிநாட்டு நீதிபதிகளை நாட்டுக்கு அழைப்பதற்கு தயாரில்லை என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தன்னிடம் கூறியதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தின் போது நேற்று(02) ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தூய்மையான அரசியல் திட்டத்தில் தூய்மையான அரச நிர்வாகத்தை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.