பங்களாதேஷ் அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் முஸ்பிகுர் ரஹீம் விக்கெட் காப்பாளராக விளையாடப் போவதில்லை என அறிவிக்கப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஓர் துடுப்பாட்ட வீரராக முஸ்பிகுர் பங்கேற்க உள்ளார் என அணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, இந்தப் போட்டித் தொடரில் லைடோன் டாஸ் விக்கெட் காப்பாளராக கடமையாற்ற உள்ளார்.
அண்மையில் நடைபெற்ற போட்டிகள் சிலவற்றில் முஸ்பிகுர் துடுப்பாட்ட வீரராக ஜொலித்த போதிலும், விக்கெட் காப்பாளராக சில சந்தர்ப்பங்களை தவறவிட்டிருந்தார் என்பதன் காரணமாக அணி நிர்வாகம் விக்கெட் காப்பாளர் பொறுப்பிலிருந்து முஸ்புகுர் ரஹீமை விடுவித்து, துடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.