லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியருக்கு எதிரான எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மே மாதம் 16ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று(03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தருவன் சேனாதீரவின் உண்மையான முகவரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் அவருக்கு எதிராக நோட்டிஸ் அனுப்புமாறு மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கையை எற்றுக் கொண்ட நீதிபதிகள் குழாம் பிரதிவாதிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் வௌியான செய்தியினால் நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாக குற்றம்சாட்டி, சட்டத்தரணி மதுர விதானகே மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.