உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசு தீர்மானமா…

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மறுசீரமைக்கப்பட்ட சியம்பலாண்துடுவ பிரதேச செயலக காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் தேர்தல் இடம்பெறுவது காலம் தாழ்த்தப்படுகின்றது.

எனினும் இதுதொடர்பில் இறுதி தீர்வை அரசாங்கம் மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.