பாகிஸ்தான் சுபர் லீக் இறுதிப் போட்டியில் பெஷாவர் சல்மி வெற்றி…

பாகிஸ்தான் சுபர் லீக் இறுதிப் போட்டியில் பெஷாவர் சல்மி (Peshawar Zalmi) அணி வெற்றி பெற்றுள்ளது.

லாகூர் நகரில் கடாபி மைதானத்தில் இடம் பெற்ற இந்த போட்டியில் Quetta Gladiators அணியை 58 ஓட்டங்களால் தோல்வியடைய செய்துள்ளது.

முதலாவதாக துடுப்பாடிய Peshawar Zalmi அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்று கொண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய Quetta Gladiators அணி 16.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.

போட்டியின் ஆட்டநாயகான 11 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் ஒரு நான்கு ஓட்டங்கள் அடங்களாக 28 ஓட்டங்களை பெற்று கொண்ட Peshawar Zalmi அணியை பிதிநிதித்துவப்படுத்திய டெரன்சமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.