பிள்ளையான் 33வது தடவையாகவும் விளக்கமறியலில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 20ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீவதான் இன்று(06) உத்தரவிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் துறை தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.