ப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று(06) 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டுக்கு சொந்தமான பி.எம்.ஜி. தீவின் தென்பகுதியில் உள்ள ‘லயே’ என்ற இடத்தில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி இருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என்றும் அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் விளைவாக மூன்றுமுறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2100 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.