சஷி வெல்கம கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுதலை…

இலங்கை போக்குவரத்து சபையின் நிதிகளை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கம பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று(06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வெல்கமவை, 2 லட்சம் ரூபா ரொக்க பிணையிலும், தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வெல்கமவின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

வெல்கம, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.