அதிநவீன தொழில்நுட்ப முறையில் வடகொரியாவால் தயாரிக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் நான்கு ஏவுகணைகள், இன்று(06) ஜப்பானின் கடலை நோக்கி ஏவப்பட்டுள்ளன.
அவ்வாறு ஏவப்பட்ட நான்கு ஏவுகணைகளுள் மூன்று ஏவுகணைகள் ஜப்பானின் பொருளாதார வலயத்திற்குள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஏவுகணைகள் சினாவின் எல்லையருகே உள்ள வடகொரியாலின் டொங்செங் (Tongchang) பிராந்தியத்திலிருந்து ஏவப்பட்டுள்ளதாக இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, குறித்த நடவடிக்கை ஜப்பானுக்கு பல புதிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஏவுகணை பரிசோதனை செய்வதற்கு ஐ.நா அமைப்பினால் வடகொரியாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மேற்குறித்த நடவடிக்கையை வடகொரியா மேற்கொண்டுள்ளது.
இந்த ஏவுகணை தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க ராணுவம், வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை தொடர்பில் தகவல் அறிந்தவுடன் அது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வின் போது வடக்கு அமெரிக்காவுக்கு அதனால் எதுவித ஆபத்தும் இல்லை என்பதை தாம் உறுதி செய்து கொண்டதாக தெரிவித்துள்ளது.