இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு ஊக்க மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திமுத் கருணாரட்ன,குசல் மென்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகிய வீரர்களே இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் தொடரொன்று ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னால் சர்வதேச கிரிக்கெட் நிர்வாக சபையால் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
பங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று(07) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.