ரூ. 10 பில்லியன் கேள்வி மனுவுக்கு அனுமதி வழங்குமாறு அர்ஜூன் கூறியதாக தீபா அம்பலம்…

திறைசேரி பிணை முறிப்பத்திர ஏல விற்பனையில் 10 பில்லியன் கேள்வி மனுவுக்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் வழங்கிய உத்தரவுக்கு அமைய அதற்கு அனுமதி வழங்க நேரிட்டதாக மத்திய வங்கியின் புள்ளிவிபர திணைக்களத்தின் முன்னாள் அத்தியட்சகர் தீபா காந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் வேறு ஒரு திணைக்களத்தில் பணியாற்றிய தான் பிணை முறிப்பத்திர ஏல விற்பனை நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே அரச கடன் திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அது தனது முதல் முறிப்பத்திர ஏல விற்பனை எனவும் அவர் கூறியுள்ளார்.

மகேந்திரனின் உத்தரவை கேள்வி மனு சபையில் இருந்த சகல உறுப்பினர்களும் எதிர்த்தனர்.

எனினும் அவரது தீர்மானத்தை மாற்ற வேண்டாம் என மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் சமரசிறி அறிவித்த பின்னர், உறுப்பினர் சம்பந்தப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திட்டதாகவும் செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.