தலைவர் ரங்கன ஹேரத் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாதனைக்கு மிக அருகில்… சாதிப்பாரா..

உலகிலேயே இடக்கை பந்து வீச்சாளர்களில் அதிக டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றிய இடக்கை பந்து வீச்சாளராக இலங்கை அணி வீரர் ரங்கன ஹேரத் சாதனை படைத்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே குறித்த சாதனையினை சாதித்துள்ளார்.

79ஆவது டெஸ்ட் போட்டியின் போதே குறித்த விக்கெட் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர் கைப்பற்றிய டெஸ்ட் விக்கெட்களின் முழு எண்ணிக்கை 357 ஆகும்.

மேலும், உலகிலேயே இடக்கை பந்து வீச்சாளர்களது பட்டியலில் அதிகூடிய டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றிய பெருமை நியூசிலாந்து அணிவீரர் டேனியல் விடோரியினை சாரும் அதேவேளை, அவர் 133போட்டிகளில் 362 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

இன்னும் 6 விக்கெட்களை ஹேரத் கைப்பற்றினால் டேனியல் விடோரி கைப்பற்றி சாதனையினை முறியடிக்கலாம்.