‘நாய் வாலை நிமிர்த்த முடியாது’ – இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து திருமாவளவன் கண்டனம்…

இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘நாய் வாலை நிமித்த முடியாது’ என்பது இலங்கை கடற்படையின் இந்த கொலை வெறித்தாக்குதலே சான்று என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தை சேர்ந்த 22 வயது மீனவர் பரிதாபதான கொல்லப்பட்டார். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய தாக்குலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான ராஜபக்ஷ அரசு தூக்கியெறியப்பட்டு தமிழக மக்கள் ஆதரவோடு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பிறகும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் தான் இலங்கை அரசுக்கு ஆதரவு அளிக்கப்படுவதாக கூறி பாஜக ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் இங்கேயும் தமிழர்களுக்கு எதிரான நிலை தான் உள்ளது. இலங்கை கடற்படையின் இந்த தாக்குதல் மூலம் நாய் வாலை நிமித்த முடியாது என்பது உறுதியாகியுள்ளது. இவ்வாறு திருமாவளவன் இந்திய ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.