மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி,மாலபே, ‘சைட்டம்’ தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள், நாடாளுமன்ற வீதியைத் தற்போது முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சைட்டம் விவகாரம் தொடர்பில் ஆர்ப்பாட்டம் செய்வதால் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் தற்போது பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியேறும் மருத்துவ பட்டதாரிகளுக்கு உள்ளக பயிற்சிகளுக்காக இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யும் உரிமை உள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் 31ம் திகதி அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.