குசல் மற்றும் பங்களாதேஷ் இனது இலக்கு குறித்து ஹதுருசிங்க ஊடகங்களிடம் கருத்து…

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி வீரரான குசல் மென்டிஸ் 194 ஓட்டங்களை கைப்பற்றியிருந்தார். குசலினது திறமையானது பாராட்டத்தக்கது என பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் ஷந்திக ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

“குசல் மென்டிஸ் பிஞ்சிலே பழுத்தது போன்று ஓட்டங்களை குவித்திருந்தார். அது உண்மையிலேயே கிரிக்கெட்டில் நெடுநாளாக ஆடிய விளையாட்டு வீரரின் திறமை அவரிடம் இருந்தது எனலாம். எமது வீரர்களது பந்துகளை பக்குவமாக கையாண்டார் என்றே கூற வேண்டும். பங்களாதேஷ் அணியினர் 600 ஓட்டங்களை பெறவேண்டும் என்பது எனது விருப்பம்…” எனவும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)