மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றிற்கு தெரியப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மாலபே, சைட்டம் தனியார் கல்லூரி தொடர்பில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு இடங்களிலும் கருத்துத் தெரிவித்து வருகின்ற நிலையில், பாராளுமன்றத்தில் வந்து அவரது கருத்தை தெரிவிக்க வேண்டும் என அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த அரசாங்கமும் இது தொடர்பான நிலையான தீர்வை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.