இரு வாரங்கள் அரசுக்கு காலக்கெடு – பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம்…

சம்பள முரண்பாடு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் கடந்த 8ம் திகதி முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டதை கைவிட்டு, எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் இரண்டு வார காலத்துக்குள் தீர்வு பெற்றுத் தர முடியாது போனால், கைவிடப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை தொடர்வதற்கு தமது சங்கம் தயார் நிலையில் உள்ளதாகவும் அதன் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)