பிணை முறி விவகாரம் – அர்ஜூன் மகேந்திரன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

சாட்சியமளிப்பதற்காக இன்று(10) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அர்ஜூன் மகேந்திரனுக்கு ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரியவினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி பிணை முறி வெளியீட்டின் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், பிணை முறி குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)