பொதுநலவாய நாடுகளின் சர்வதேச வர்த்தக முயற்சிகளுக்கு இலங்கை தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பை வழக்குமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் லண்டனில் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் அங்குரார்ப்பண மாநாடு லான்செஸ்டர் ஹவுஸில் ஆரம்பமான போது இலங்கையின் பிரதிநிதியாக பங்கேற்ற
கைத்தொழிம் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாட்டுடன் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் இம்மாநாட்டில் இணைந்து கொண்டார்.
பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் இலங்கையுடனான சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு பொதுநலவாய நாடுகள் பல்வேறு வழிகளிலும் உதவியளிப்பதை விஸ்தரிக்குமாறும் அமைச்சர் வேண்டிக் கொண்டார்.
இம்மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது;
சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு பொதுநலவாய நாடுகளிலிருந்து இலங்கை சாதகமான உதவிகளைப் பெற்று வருகின்றது. பொதுநலவாய நிலைப்பாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட உறவுகள் இருக்கின்றன.
அத்துடன் வர்த்தக முன்னேற்றம் முதலீடு மற்றும் தொழில் உருவாக்கத்திற்கும் இதன் பங்களிப்பு உதவுமென நான் நம்புகின்றேன் என இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.