சைட்டம் தனியார் கல்லூரியின் பெற்றோர்கள் சங்கம் காவற்துறையிடம் முறைப்பாடு…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பட்டதாரிப் பட்டமானது சட்டவிரோதமானது என அரச அலுவலகங்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பதாதைகளை அகற்றுமாறு கோரி இன்று(13) காவற்துறையிடம் முறைப்பாடு ஒன்றினை கையளிக்கவுள்ளதாக மாலபே வைத்திய கல்லூரி மாணவர்களது பெற்றோர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், அரச நிறுவனங்கள் பொதுமக்கள் யாவருக்கும் பொதுவானது எனவும், இவ்வாறான இடங்களில் பதாதைகளை வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த முறைப்பாட்டில் பதிவு செய்யவுள்ளதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

(rizmira)