முக கருமையைப் போக்கனுமா… இந்த துளசி face mask ட்ரை பண்ணுங்க…

துளசி இலைகள் உடலில் உள்ள பிரச்சினைகளைப் போக்க மட்டுமின்றி, சரும பிரச்சினைகளைப் போக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது.

இதற்கு அதில் உள்ள antiseptic தன்மைகள் தான் முக்கிய காரணம். இதனால் பருக்கள், கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவை எளிதில் மறையும்.

துளசி மற்றும் முட்டை வெள்ளைக்கரு
இந்த face mask  சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சரும நிறத்தை அதிகரிக்க உதவும். அதற்கு ஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இறுதியில் ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுங்கள்.

துளசி மற்றும் தயிர்
இந்த face mask முகத்தில் உள்ள பருக்களைப் போக்குவதோடு, இனிமேல் பருக்கள் வராமலும் தடுக்கும். அதற்கு சிறிது துளசி இலைகளை அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் காணாமல் போய்விடும்.

துளசி மற்றும் எலுமிச்சை
இந்த face mask  எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது. இதற்கு ஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்படும்.

 

(rizmira)