ராஜகிரிய, பொரளை, பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜகிரியவில் இருந்து ஆயுர்வேத சந்தி வரை பயணிகள் பேரூந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை காரணமாக குறித்த இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், குறித்த ஒத்திகை நேற்று(12) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 19 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.